மூட நம்பிக்கையை ஒழிப்போம்


உங்கள் சிந்தனைக்கு.. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்களே.. இந்த நவீன காலதிலும் கூட .நாம் சிந்திக்காமல் சில விடயங்களை செய்து வருகிறோம். ஏன் செய்கிறோம். எதற்கு செய்கிறோம். என்று தெரியாமலே. காலம் காலமாக எல்லோரும் செய்கிறார்கள். நாங்களும் செய்கிறோம். என்று காரணம் தெரியாமலும் உண்மைதன்மை தெரியாமலும் செய்து வருகிறோம். அதை தெளிவு படுத்துவது தான் பகுத்தறிவு..

நம்ம மதத்தில் வேல் குற்றுவது தீயில் இறங்குவது தீ சட்டி எடுப்பது என்று சொல்லி கொண்டே போகலாம். இதெல்லாம் கடவுள் சக்தியால் தான் செய்ய முடியும் அதற்கு அருள் வேண்டும் என்று சொல்லுவாங்க. அது ஒரு மூட நம்பிக்கை அதை யார் வேண்டுமானாலும் செய்லாம் என்று செய்து நிருபித்து காட்டி இருக்காங்க மூட நம்பிக்கையை ஒழிப்போம் யாரையும் புண்படுத்த அல்ல விழிப்புணர்வு பகுத்தறிவு சிந்திக்க

இறைவனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் :

சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால்
நினைக்கின்ற காரியம் நிறைவேறும்

இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும்.

பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் .

பசும் தயிரினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தி ஏற்படும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால்
வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும் .

சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் எட்டுவித செல்வம் கிடைக்கும்.

நெல்லி முல்லைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால்
நோய்கள் நீங்கும் .

பஞ்சு கவ்வியத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நீங்கும் (பஞ்ச கவ்வியம் என்பது பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை ஐந்தும் சேர்ந்தது )

பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெறும் .

தேன் அபிஷேகம் செய்தால் வாழ்வு இன்பமயமாகும் .

வாழை பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும் .

அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .

இவை தவிர மாப்பொடி கடன் தீரவும் ,மஞ்சள் பொடி வசீகரம் ஆகிய பலன்களையும் தரும் .

மற்றும் கரும்பின் சாறு பிணி நீக்கவும் ,எலுமிச்சம் சாறு பயம் நீக்கவும் செய்கிறது

இதில் நீங்கள் என்ன செய்ய உத்தேசம்
எப்பபோதய்யா திருந்தும் இத்தேசம்
இன்னும் எவளோ நாளைக்குதான் இதையே செய்து கொண்டு இருக்கபோரிங்க.

பிள்ளைக்கு பால் இல்லாமல்,பிச்சை எரியும் தேசத்தில்கல்லுக்கு பால் ஊற்றும் கதை ஒழிதல் என்னாளோகல்லுக்கு பொட்டு இட்டு, சாமி என்று மதிப்பவர்கள்,ஏழைக்கு மதிப்பளித்து, இன்புறுத்தல் என்னாளோ

நானும் இந்துதான் இந்த மாரியான மூட நம்பிக்கையை நான் ஏற்று கொல்வதில்லை. கடவுளை வாங்குவதாக சொல்லி கொண்டு நாம் இந்த மாறி சாப்பிடும் பொருளை இப்படி யாருக்கும் புரோஜனம் இல்லாமல் வீனடிப்பது சரியா? . பசும் பாலை சாப்பட்டை கல் சிலைக்கு ஊற்றி அநியாயம் பண்ணுவது. சரியா சிந்தியுங்கள். இது அறியான்மை தானே . நாம் இப்படி செய்வதால் எந்த நன்மையையும் புரோஜனமும் இல்லை. இதை நாம் மக்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். பிச்ச காரர்களுக்கு கொடுக்கலாம். யார் மனதையும் புண் படுத்த சொல்லவில்லை சிந்திக்க

அதேபோல் அம்மா அப்பா கொடுத்த அழகான உடலை கடவுளை வனங்குவதாக சொல்லி கொண்டு . அநாகரிகமாக தன் உடம்பை துன் புறுத்தி கொள்வது, வேல் குறுவது, நெருப்பில் இறங்குவது. மண்ணில் உருண்டுபோவது . தேங்காய் உடைப்பது.திருவிழா என்ற பெயரில் பொது இடங்களையும். பொது மக்களையும் தொந்தரவு செய்வது. உயிர் பலி கொடுப்பது. இப்படி சொல்லி கொண்டே போகலாம் , அவளோ மூட நம்பிக்கை இருக்கிறது நம்மில். யாரையும் புண் படுத்த சொல்லவில்லை சிந்திக்க நாம் செய்யும் தவறுகளை இன்னொருவர் நமக்கு சுட்டி காட்டும் போதுதான் நம் தவறை நாம் உணர்கிறோம். உணர்வோம் உணர்வு பெறுவோம் எனவே இதையெல்லாம் செய்ய சொல்லி

எந்த கடவுள் உங்களுக்கு சொன்னது உங்களால் சொல்ல முடியுமா ? இப்படி செய்ய சொல்லி.. எந்த கடவுளும் சொல்லவில்லை. மனிதரின் அறியான்மையில் செய்வதுதான் இது. அந்த காலத்தில் காட்டு மிராண்டி காலத்தில் ஆரம்பிக்க பட்ட சடங்குதான் இது இன்றைய தலைமுறைகள் இந்த மாரியான மூட பழக்க வழக்கங்கை தவிர்க்க வேண்டும். உலகம் நம்மை ஏளனம் செய்கிறது. எதிர்காலதில் நம் பிள்ளைகளையும் இந்த சாக்கடைக்குல் இருந்து காப்பற்ற, அதற்கான பிரச்சாரன்களை செய்ய வேண்டும். சிந்திக்க ஒரு பகுத்தறிவு விமர்சனம் யாரையும் புண்படுத்த அல்ல

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்